அலோர் ஸ்டார், ஜூலை 17-

மியன்மார் ஆடவர்கள் இருவரை நாட்டுக்குள் கடத்தி வந்த தொழில்நுட்ப உதவியாளர் ஒருவருக்கு அலோர் ஸ்டார் உயர்நீதிமன்றம் 30 மாதச் சிறைத்தண்டனையை விதித்துள்ளது.  அந்தக் குற்றச்சாட்டு உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ ஹாஷிம் ஹம்சாவின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட போது அதனை ரோஹாய்ஸாம் ரம்லி ஒப்புக் கொண்டார்.

கடந்தாண்டு டிசம்பர் 7ஆம் தேதி காலை 8.45 மணியளவில், வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையின் 1.3 கி.மீட்டரில் புக்கிட் காயு ஹீத்தாமிற்கு அருகில் மின் நியுட்(33), மின் வின் ஹிலாயிங்(27) ஆகியோரைக் ஆள்கடத்தல் செய்ததாக ரோஹாய்ஸாம் மீது 2017ஆம் ஆண்டு ஆள்கடத்தல் மற்றும் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இது நோஹாய்ஸாமின் முதல் குற்றம் என்பதால் குறைந்த தண்டனையை அளிக்கும்படி அவரின் வழக்கறிஞர் புர்ஹானுடின் அப்துல் வாஹிட் கேட்டுக் கொண்டார்.