கோலாலம்பூர், செப். 23-
மத்திய அரசை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவு தனக்கு இருப்பதாக பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் இன்று கோலாலம்பூரின் லி மெரிடியன் தங்கும் விடுதியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதுமான ஆதரவு தமக்கு இருப்பதாகக் கூறியவர், அது சிறிய பெரும்பான்மை அல்ல என்பதையும் சுட்டிக் காட்டினார்.

பல்வேறான கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவு வழங்கியிருப்பதாகவும் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்,

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு தமக்குப் பெரும்பான்மை இருப்பதாக நம்பப்படுவதை நிரூபிக்க நிரந்தர ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அன்வார் உறுதியளித்தார்.

மாமன்னரைத் தாம் சந்தித்த பிறகு ஆவணங்களைச் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்,