ஷாஆலம், அக். 22-

இந்து ஆலயங்களுக்கான மானியங்களை தன் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் அறிவித்தார்.

இவ்வாண்டிற்க்கான ஆறாவது தவணையாக வழங்கப்படும் இந்து ஆலயங்களுக்கான சிலாங்கூர் மாநில அரசின் மானியங்களை, ஆலய நிர்வாகிகள் அல்லது ஆலய பொருப்பாளர்கள் ஷா ஆலயம் மாநில அரசின் தலைமையகத்தில் உள்ள தன் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் முறையான முன் பதிவு செய்து விட்டப் பிறகு அலுவலகத்தை நாடும் படியும் அவர் அறிவுறுத்தினார்.

கோவிட்-19 , தொற்று நோயின் காரணமாக தனி நபர் இடைவெளி பின் பற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இம்முறை ஆலய பொருப்பாளர்களை அழைத்து ஒரே இடத்தில் ஒன்று கூடி மானியத்திற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இம்முறை 38 ஆலயங்களுக்கான காசோலைகள் வழங்கப்படவிருப்பதுடன் அதன் மொத்த தொகை ரி.ம.254, 000 ஆகும் என்றும் அவர் கூறினார்.

மாநில அரசு வழங்கி வரும் ஆலயங்களை பல ஆலயங்கள் மக்களின் நன்மைக்காக பயன் படுத்தி வருவது பாராட்டுக்குறியது என்றாலும் இன்னும் சில ஆலயங்கள் மக்கள் சேவையை புறந்தள்ளி வருவது வேதனையளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

ஆலயத்தை சுற்றி உள்ள பொது மக்களுக்கும் இந்து பக்தர்களுக்கும் ஆலயங்கள் உதவ முன் வர வேண்டும்,இன்றைய கோவிட் 19 பாதிப்பால் பலர் உணவின்றியும் வேலையின்றியும் பரிதவித்து வரும் இவ்வேளையில் ஆலயத்தின் மனித நேய உதவிகள் அவர்களுக்கு பெரும் உதவியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
தான் கொண்டு வந்த அட்சய பாத்திர திட்டத்தில் பங்கு எடுத்துக்கொண்ட ஆலயங்களுக்கும் இன்னமும் அத்திட்டத்தை தொடர்ந்து வரும் ஆலய நிர்வாகிகளுக்கும் இவ்வேளையில் என்னுடைய நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

இந்து ஆலயங்களுக்கான சிலாங்கூர் மாநிலத்தின் மானியங்களை ஆட்சி குழு உறுப்பினர், வீ.கணபதிராவ் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அவரின் சிறப்பு செயலாளர் குமாரி யோகேஸ் பின் வரும் அழைப்பேசி எண்களில் 03-5447306 தொடர்ப்புக்கொண்டு காலை மணி 10.00 முதல் 12.00 வரை மற்றும் மாலை 2.30 முதல் 4.00 மணி வரை (19/10/2020- 22/10/2020) தங்களின் வருகையின் உறுதி செய்த பிறகு அலுவலகத்திற்க்கு வருகை தரும் படியும் தெரிவித்தார்.

கீழ் கண்ட ஆலய நிர்வாகிகள் தாராளமாக தொடர்ப்புக்கொள்ளளாம்:

 1. PERSATUAN PENGANUT DEWI SRI KARUMARIAMMAN KLANG,SELANGOR
 2. SRI VEERAKATHY VINAYAGAR ALAYAM RAWANG
 3. PERSATUAN PENGURUSAN KUIL SRI MAHA MARIAMMAN TAMAN WAWASAN,BATANG KALI,SELANGOR
 4. PERSATUAN PENGANUT SRI MAHA MARIAMMAN TAMAN PERMATA,DENGKIL
 5. PERSATUAN PENGANUT SRI MAHA MARIAMMAN,LADANG SUNGAI TERAP TANJONG KARANG
 6. COMMOTTEE OF MANAGEMENT OF THE SITHI VINAYAGAR TEMPLE
 7. KUIL SRI MAHA MARIAMMAN (DEWI SRI KARU MARIAMMAN)STESEN JANALETRIK JAMBATAN CONNAUGHT,JALAN KAMPONG JAWA
 8. PERSATUAN PENGANUT AUM SIVA MUNEESWARAR,KAMPUNG BENGALI
 9. PERSATUAN PENGANUT SRI THANDAYUTHAPANI SUNGAI BUAYA,RAWANG
 10. JAWATANKUASA PENGURUSAN THIRUMURUGAN AALAYAM
 11. PERSATUAN PENGANUT SRI NAGAMMAL PELABOHAN KLANG
 12. PERSATUAN PENGANUT DEWA SRI MATHURAI VEERAN ARUL VAAKU ALAYAM,SELAYANG BARU
 13. KUIL SRI MAHA MARIAMMAN FELDA GEDANGSA,SELANGOR
 14. PERSATUAN PENGANUT SRI MAHA MARIAMMAN PASIR PENAMBANG ,KUALA SELANGOR
 15. PERSATUAN PENGANUT SRI SIVA SUBRAMANIAR SUNGAI BULOH,SELANGOR
 16. PERSATUAN PENGANUT SRI NAGAMUTHU MARIAMMAN ANJALAI AMMA,TAMAN MAWAR
 17. PERSATUAN PENGANUT MUNISWAR-NAGAMA KLANG
 18. PERSATUAN PENGANUT ARUL MIGU MAHA SIVALINGGESWARAR
 19. PERTUBUHAN PENGANUT SRI MUNISWARAR SABAK BERNAM
 20. JAWATANKUASA PENGURUSAN KUIL SRI MAHA MARIAMMAN BATU 8 1/2 JALAN KAPAR,KAMPUNG PEREPAT
 21. PERSATUAN PENGANUT SRI MAHA MARIAMMAN LADANG SELANGOR RIVER
 22. PERSATUAN PENGANUT SRI MAHA MARIAMMAN TAMAN JATI,RAWANG
 23. PERSATUAN PENGANUT SRI MAHA MARIAMMAN LADANG RIVER SIDE,KUALA SELANGOR
 24. JAWATANKUASA PENGURUSAN KUIL SRI SITHI VINAYAGAR TAMAN KOSKAN SUNGAI CHOH RAWANG
 25. PERSATUAN PENGANUT SRI MAHA MARIAMMAN VALLUVARSTHANAM PEKAN MERU,KLANG
 26. PERSATUAN PENGANUT SRI SANGILI KARUPPAN KAMPUNG RAJA MUSA KUALA SELANGOR
 27. PERSATUAN PENGANUT DEVI SHREE KARUMARIAMMAN LADANG SEMENYIH
 28. PERSATUAN PENGANUT SRI SANGILI KARUPPAN LADANG RAJA MUSA KUALA SELANGOR
 29. PERSATUAN PENGANUT SRI MADURAI VEERAN,LADANG RAJA MUSA KUALA SELANGOR
 30. PERTUBUHAN PENGURUSAN KUIL SUBRAMANIYAR ALAYAM RUMAH MURAH BT 16 RAWANG
 31. PERSATUAN PENGANUT SRI MAHA VANNA MUNISWARAN GOMBAK ,SELANGOR
 32. PERSATUAN PENGANUT DEWA SRI MAHA MARIAMMAN BUKIT CHERAKA,JERAM
 33. PERSATUAN SHIRDI SAI BABA,SELANGOR
 34. PERSATUAN PENGANUT SRI KARUMARIAMMAN KAPAR,KLANG
 35. JAWATANKUASA PENGURUSAN KUIL SRI MAHA MARIAMMAN LADANG MIDLANDS,KLANG
 36. PERSATUAN PENGANUT SRI MAHA MARIAMMAN ,TAMAN RAWANG PERDANA
 37. PERSATUAN PENGANUT SRI MAHA MARIAMMAN KAMPUNG JAWA KLANG, SELANGOR
 38. KUIL SRI SUBRAMANIAR TELUK DATUK BANTING SELANGOR

நன்றி.
சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சி குழு உறுப்பினர், வீ.கணபதிராவ் அலுவலகம்.