பத்துமலை, நவம்பர் 20:-

தற்சமயம் நடைமுறையில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல துறைகள் இயங்க முடியாமல் போனது. அதில் குறிப்பாக, திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாட்டாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கின்றனர். தங்களின் வாழ்வாதாரமே அதனால் பாதிக்கப்பட்டிருப்பதால், அத்துறைக்கு தடை விலக்கு வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இன்று பிற்பகல் பத்து 7 ஷெங்கா மண்டபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மலேசிய இந்தியர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இயக்கத்தினர் தங்களின் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

எனவே, அரசாங்கத்திடம் தடை விலக்கை மட்டும் முன் வைக்காமல் திருமணம், பிறந்தநாள், பொது நிகழ்ச்சிகள் போன்றவை கட்டுபாடுகளுக்கு உட்பட்டு நட்த்தப்படும் என்றும் அவ்வியக்கத்தின் தலைவர் டத்தோ கே. சிவக்குமாரமுறூதியளித்தார். மண்டபத்தின் கொள்ளளவு அடிப்படையில் அதில் வருகையாளர்கள் எண்ணீக்கை முடிவு செய்து நிகழ்ச்சிகளை நடத்த அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்பதையும் அவர் அந்தச் செய்தியாளர் சந்திப்பில் கேட்டுகொண்டார்.

இன்னும் சில உதவிகளையும் இதன் வழி மலேசிய இந்தியர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக தெக்குன், SME Corp, PUNB, மித்ரா உதவிகள் தொடரப்பட வேண்டும் என்பதோடு மேலும் சில உதவிகளை அரசாங்கின் பார்வைக்குக் கொண்டு வருகின்றனர்.

ஆகிய 7 முக்கிய உதவிகளையும் அவ்வ்மைப்பு நாடுவதாக ஆர்.டி.ஏ. பநோகு மண்பத்தின் இயக்குநர் இராஜன் இராமன் தெரிவித்தார்.

இதுவரையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளார் துறையில் இருந்து சுமார் 40 விழுக்காட்டினர் முழுதாக வெளியேறி விட்டதாகவும் இத்துறைக்குப் புதிதாக வந்தவர்கள், இன்னும் வளர்ந்து கொண்டிருப்பவர்கள் முழுதாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இராஜன் இராமன் மேலும் குறிப்பிட்டார்.

இங்கு நாங்கள் மேற்கோள் காட்டியிருப்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடைய பிரச்சனை மட்டும் இல்லை. எங்களுக்குப் பின்னாலும் தொடர்புடையராகவும் சுமார் 26 துணைத் துறைகள் அடங்கியுள்ளன, மண்டப உரிமையாளர்கள், இட அலங்காரம், உணவு (கேட்டரிங்), நிழற்படக் கலைஞர்கள், காணொலிக் காட்சிப் பதிவாளர்கள், ஒலிபெருக்கி அமைப்பு, மாலை கட்டுவோர், பூ அலங்காரம் செய்வோர், முக ஒப்பனைக் கலைஞர்கள், திருமணப் பரிசுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், திருமண உடை வாடகை வழங்குநர், நிகழ்ச்சி நெறியாளர்கள், பலூன் வியாபாரிகள், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி போன்றவைகள் முக்கியமானவை” என ஷெங்கா மண்டபத்தின் உரிமையாளர் இந்திரன் பட்டியலிட்டார்.

இவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இது சங்கிலித் தொடர்புடையத் துறைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்துக்களைப் பொருத்தவரையில், ஆண்டு முழுவதும்  திருமன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட மாட்டாது. சில குறிப்பிட்ட மாதங்களில் எவ்வித மங்கள காரியங்கள் நடைபெறாது. அதே நேரத்தில் திருமண காலம் என்றும் சில மாதங்கள் இருக்கின்றன. இதனை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும்.

அது மட்டும் இன்றி, திருமண நிகழ்ச்சிகள் தள்ளிப்போடப்படுவது அவசகுனமாகவும் பார்க்கப்படுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட தம்பதிகளைப் பெரிதும் பாதிக்கும். இதனையும் ஒரு முக்கிய கூறாக நாங்கள் கவனத்தில் கொள்வதால் தான் அரசாங்கத்திடம் இத்தகையத் தடை உத்தரவை நீக்கக் கோரி வேண்டுகிறோம் என இவ்வியக்கத்தின் தலைவர் டத்தோ கே. சிவக்குமார் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிகள் தொடர்புடைய இதர வியாபாரத்தைக் கவனத்தில் கொள்ளும் போது கேட்டரிங் துறையில் 12 ஆண்டு காலமாக ஈடுபாடு காட்டி வரும் வனிதா நம்மோடு அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

“இந்தியர்களாஇப் பொருத்தவரையில் ஓர் ஆண்டில் 6 மாதங்கள் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். இன்னொரு ஆறு மாதங்கள் நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாது. ஆறு மாதங்களின் வருமானமே அடுத்த ஆறு மாதத்திற்குப் பயன்படுத்தப்படும். ஆனால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்படட்து முதல் இன்று வரை என்று தான் இப்பிரச்சனை தீரும் எனக் காத்திருந்தது மட்டுமே நிஜமாகியிருந்தது. முன்னர், 12 பேர் ஊழியர்கள் இருந்தனர். ஆனால், இன்று 4 பேராகக் குறைந்திருக்கிறது. இவர்களுக்கு அடுத்த மாதம் எப்படி சம்பளம் கொடுக்கப் போகிறோம் என்றே எனக்குத் தெரியவில்லை.”

ஆகவே, அரசாங்கம் இதில் உள்ள சங்கிலித் தொடர் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கும் என மலேசிய இந்தியர் நிக்ழ்ச்சி ஏற்பாட்டாளர் அமைப்பினர் பெரிதும் எதிர்ப்பார்க்கின்றனர்.