பத்து, நவம்பர் 21:-

இங்குள்ள வசதி குறைந்த 150 குடும்பங்களுக்குத் தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது. இதனை ம.இ.கா.வின் தேசிய நிர்வாகச் செயலாளாரும் பத்து நாடாளுமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளருமான ஏ.கே. இராமலிங்கம் வழங்கினார்.

சுற்று வட்டாரத்தில் இருக்கும் வசதி குறைந்தவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்ததாகக் கூறிய அவர், அதில் அவர்களுக்குத் தேவையான அடிப்படை சமையல் பொருட்கள் அடங்கும் என தொழில்முனைவரும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினருமான ஏ.கே. இராமலிங்கம் குறிப்பிட்டார்.

கோவிட்-19 பெருந்தொற்றால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தற்போது நடைமுறையில் உள்ளது. அதனால் பலர் வருமானம் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.