பெஸ்தாரி ஜெயா, நவ.11-
நாட்டில் இனபாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சரிசமமான வகையில் உதவிகள் நல்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை வரையறுத்துள்ள அதன் ஸ்தாபகர் டத்தோ பங்ளிமா ஹாசாருல்லா சால் தலைமையிலான மலேசிய டத்தோக்கள் ஒருங்கிணைப்பு மன்றம் தனது கொள்கைபடி முன்பு பத்தாங் பெர்ஜூந்தை என்று அழைக்கப்பட்ட பெஸ்தாரி ஜெயாவில் உள்ள சுங்கை ரம்பை தோட்ட இந்திய மக்கள் பலருக்கு மலேசிய டத்தோக்கள் ஒருங்கிணைப்பு மன்றத்தின் சார்பில் அதன் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் தவத்திரு ஸ்ரீ சுகுந்தன் தீபாவளி உதவிப் பொருட்கள், பண முடிப்புகளை வழங்கினார்.

மலேசிய டத்தோக்கள் ஒருங்கிணைப்பு மன்றத்தின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் தவத்திரு ஸ்ரீ சுகுந்தன் சுங்கை ரம்பை தோட்டத்திற்கு விரைந்து தோட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்து தீபாவளி உதவிப் பொருட்களை வழங்கியது தோட்ட மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு காலத்தில் தோட்டத்தில் தீபாவளி கொண்டாட்டம் மிகவும் குதூகலமாக இருக்கும். ஆனால், காலமாற்றத்திற்கு ஏற்ப தோட்ட மக்கள் பலர் தோட்டத்தை விட்டு வெளியேறி நகர்புறங்களுக்கு மாறிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் தோட்டத்தில் தீபாவளி கொண்டாடும் மக்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவிப் பொருட்கள் மற்றும் பண முடிப்புக்கள் அவர்களின் தோட்ட தீபாவளியை மேலும் குதூகலமாக்கும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் தவத்திரு ஸ்ரீ சுகுந்தன் குறிப்பிட்டுள்ளார்.

தோட்டத் தீபாவளியை பார்க்க முடியாவிட்டாலும் அவர்களின் தீபாவளியை குதூகலமாக்க மலேசிய டத்தோக்கள் ஒருங்கிணைப்பு மன்றத்தின் தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் தவத்திரு ஸ்ரீ சுகுந்தன் சுங்கை ரம்பை தோட்ட மக்களுக்கு தேவையான தீபாவளி உதவிப் பொருட்களை தோட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் நேரில் வழங்கி சிறப்பித்துள்ளார்.

சுங்கை ரம்பை தோட்டத்திற்கு விரைந்து தாமே உதவிப் பொருட்களை பொட்டலமிட்டு தோட்ட மக்களுக்கு வழங்கினார். இந்த உதவிப் பொருட்கள் மற்றும் பண முடிப்புகளை பெற்றுக் கொண்ட தோட்ட மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிந்தது.

சுங்கை ரம்பை தோட்ட ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தோட்ட மக்கள் டத்தோஸ்ரீ டாக்டர் தவத்திரு ஸ்ரீ சுகுந்தன் அவர்களை நேரில் சந்தித்து தங்களின் நன்றியை புலப்படுத்தியதோடு அவருடன் அளவுளாவினர் என்பது குறிப்பிடத்தக்கது.