கோத்தா கினபாலு, ஆக. 17-

சபா மாநில 16ஆவது சட்டமன்றத் தேர்தல் செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெறுமெனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக செப்டம்பர் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறும். ஆரம்ப வாக்களிப்பு செப்டம்பர் 22ஆம் தேதி நடக்குமெனத் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷரோம் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) சபா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான நீதித்துறை மறு ஆய்வுக்கான தான்ஸ்ரீ மூசா அமனின் முயற்சியை முடிவு செய்வதாக இங்குள்ள உயர் நீதிமன்றம் முன்னர் கூறியிருந்தாலும், தேதிகள் குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

சபா மாநிலத் தேர்தல்களில் 30,540 தேர்தல் ஊழியர்கள் பணியாற்றுவார்கள் என்றும், சபா மாநிலத் தேர்தலில்741 வாக்களிப்பு மையங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அஸ்மி கூறினார்.