கோலாலம்பூர், நவம்பர் 20:-

டத்தோ சசிகலா சுப்ரமணியம் காவல் துறையின் உயர்நிலைப் பதவியான துணை ஆணையராகப் (டிசிபி) பொறுப்பேற்கிறார்.

காவல் துறை டிசிபி-ஆக ஓர் இந்தியப் பெண்மணி பதவி வகிப்பது இதுவே முதல்முறை.

மேலும், புக்கிட் அமான் வர்த்தகக் குற்றவியல் விசாரணைப் பிரிவு துணை இயக்குநர் பொறுப்பையும் ஏற்கவிருக்கிறார்.

இந்தியப் பெண்களாலும் அரசாங்கத்தின் உயரியப் பொறுப்புகளுக்குத் தகுதி பெறுவர் என்பதற்கு டத்தோ சசிகலாவின் சாதனையும் ஒரு சான்றாக விளங்குகிறது.