புத்ராஜெயா, அக். 21-


தேசியப் பாதுகாப்பு மன்றம் (MKN) நேற்று வெளியிட்ட வீட்டிலிருந்தே வேலை செய்யும் பணிகள் குறித்த கூடுதல் விவரங்களை அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு (MITI) இன்று அறிவித்துள்ளது.

ஒரு அறிக்கையில், ஒரு நிறுவனத்தில் தொடர்புடைய துறைகளைச் சேர்ந்த 10% மூத்த ஊழியர்கள், நிர்வாகம் மற்றும் மேற்பார்வையாளர்கள், அலுவலகத்தில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைப் பின்பற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உயர் நிர்வாகத்தின் உறுப்பினர்களைத் தவிர நிதி, நிர்வாகம், சட்ட மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கும் அதிகபட்சம் நான்கு மணி நேரம், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் வரை அங்கு வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.