ஷா ஆலம், நவம்பர் 20:-

தமிழ்ப்பள்ளிகளுக்கான சிலாங்கூர் மாநில அரசின் மானியங்கள் நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் இன்று அறிவித்தார்.

கோவிட் 19 தொற்றின் காரணமாக வங்கி காசோலைகளை பள்ளி பொருப்பாளர்களிடத்தில் ஒப்படைக்கும் முறைக்கு மாற்றாக பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அல்லது பள்ளி வாரியத்தின் வங்கி கணக்குகளில் விண்ணப்பங்களுக்கு ஏற்றவாறு சேர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டிற்க்கான முதல் கட்ட மானியங்கள் என்று முதல் 83 தமிழ்ப்பள்ளிகளுக்கு ரி.ம.4,360,000 வெள்ளி செலுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆள் நடமாட்ட கட்டுப்பாடு மற்றும் வீட்டில் இருந்து பணி செய்யும் சூழ்நிலை காரணமாக சில வங்கிகளில் 3 முதல் 5 நாட்களுக்கு பிறகுத்தான் தொகைகள் வங்கி கணக்குகளில் சேர்க்கப்படும் சூழ்நிலை இருப்பதையும் நிர்வாகிகள் நினைவில் கொள்ளும் படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

மீதம் உள்ள பள்ளிகளுக்கான மானியம் இரண்டாம் கட்டமாக வழங்கப்படும் என்றும் விண்ணப்ப பாரங்கள் பரிசீலனையில் உள்ளது என்பதையும் பள்ளி நிர்வாகிகள் கருத்தில் கொள்ளும் படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

கீழே கொடுக்கப்பட்ட பெயர் பட்டியலில் எந்த எந்த பள்ளிகளுக்கு எவ்வளவு தொகை என்கின்ற விவரங்களும் விரிவாக தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேல் விவரங்களுக்கு தன் அலுவலகத்தை தொடர்ப்பு கொள்ளளாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.