அம்பாங், நவ. 18-
தம்பின் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மொக்தார் ஹாஷிம் (வயது 78) புதன்கிழமை (நவம்பர் 18) அம்பாங் மருத்துவமனையில் காலமானார்.

அவரது உடல் புக்கிட் கியாரா முஸ்லீம் கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர், தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் மசூதிக்குக் கொண்டு வரப்படும்.

அதிகாலை 3.10 மணியளவில் மொக்தார் காலமானதை அவரது மருமகன் அஹமத் ஹபீஸ் அப்துல் ரஃபர் பேஸ்புக் பதிவில் உறுதிப்படுத்தினார்.

மொக்தார் 1980களின் முற்பகுதியில் கலாச்சாரம், இளைஞர், விளையாட்டு அமைச்சராக பணியாற்றினார்.