தெலுக் இந்தான்,  மாரச் 22-

தமிழிலுள்ள மந்திரங்களை ஓதுவதின் வாயிலாக உள்ளம் தூய்மை பெறுவதோடு விசாலமான சமயத் தெளிவும் ஏற்படுவதாக இங்குத் தெரிவிக்கப் பட்டது.

நம்முடைய சித்தர்கள் நாம் படித்து அனுபவ ரீதியாக உணர்ந்து உயர்வடையும் முறையில் மந்திரங்கள் வாயிலாக இதனை உணர்த்தி் இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.

இன்று காலையில் இங்குள்ள திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியில் மாணவரிடையே பேசியபோது மலேசிய சற்குரு மரபு சித்தாந்த தியான சபையின் குருஜி ஏ.இராமசாமி மேற்கண்டவாறு நல்லுரை வழங்கினார். மந்திரங்களை ஓதி மனங்களை ஒன்று படுத்துவதின் வாயிலாக இறைவனின் முழு அன்பையும்  பெறுவதோடு பிறப்பின் நோக்கத்தையும் நம்மால் உணர்ந்து கொள்ள முடிவதாக குருஜி மேலும் சொன்னார்.

மாணவர்கள் எப்பொழுதும் இறைச் சிந்தனையோடு செயல்பட்டு நம்மிடையே உள்ள மந்திரங்களை தினந்தோறும் ஓதுவதின் வாயிலாக அவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு நன்னெறிப் பண்புகளைக் கொண்டவர்
களாகவும் திகழ முடியுமென அவர்  மேலும் சொன்னார்.

பள்ளியின் தலைமை யாசிரியை திருமதி சரஸ்வதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் மாணவ மாணவியரும் இச் சமய ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

1 COMMENT

Comments are closed.