பத்துமலை, நவம்பர் 21:-

ஷெங்கா பல்நோக்கு மண்டபமும் பெர்ஜாயா கேர் அறவாரியமும் இணைந்து வசதி குறைந்த 500 குடும்பங்களுக்கு தீபாவளியை முன்னிட்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை சமையல் பொருட்களை வழங்குகின்றனர்.

இதனை கட்டங்கட்டமாக விநியோகிக்க இருப்பதாகவும் முதற்கட்டமாக சுங்கை துவா சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் 50 பேருக்கு வழங்கியிருப்பதாகவும் ஷெங்கா பல்நோக்கு மண்டபத்தின் உரிமையாளர் இந்திரன் தெரிவித்தார்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் 20 பேருக்கும் அந்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த உதவிப் பொருட்களை பத்துமலை, உலு சிலாங்கூர் பகுதிகளில் இருக்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாகவும் இந்திரன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பெர்ஜாயா கேர் அறவாரியத்தின் இயக்குநர் ஷெர்லி, கோம்பாக் ம.இ.கா. தலைவர் சுகுமாறன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை வழங்கினர்.

இந்த முன்னெடுப்பு வெற்றிகரமாக அமைய ஆதரவும் உதவிக்கரமும் நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தனது நன்றியை இந்திரன் தெரிவித்துக் கொண்டார்.