வியாழன், 22 அக்டோபர்
சுவ்னா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி
நடிகர்கள்: அம்மி விர்க் & டானியா
வாழ்க்கையில் எந்த குறிக்கோள்களும் அக்கறையும் இல்லாத, சுதந்திரமான உற்சாகமான கிராமத்து இளைஞன், ஜீத். ஆனால், மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த டேக் என்ற அழகான பெண்ணைச் சந்திக்கும் போது, அவரது வாழ்க்கை மாறுகிறது.

வெள்ளி, 23 அக்டோபர்
கேஷ் பேக் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: மம்மூட்டி, ஸ்வராஜ் கிராமிகா & மம்முகோயா
நித்யானந்தா ஷெனாய் காசர்கோடு நகரைச் சேர்ந்தவர், இப்படம் கறுப்புப் பணத்தை சமாளிப்பதற்கான அவரது போராட்டத்தை சித்தரிக்கிறது.

சனி, 24 அக்டோபர்
மஹாந்தா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மதியம் 2 மணி
நடிகர்கள்: ஜீதேந்திரா, சஞ்ஜய் துத், மாதுரி டிக்சித், சக்தி கபூர் & கடேனி டென்சோங்பா
ஒரு தீயவரிடமிருந்து பாதுகாக்க சஞ்ஜயை விஜய் கைது செய்கிறான். ஆனால் சஞ்ஜய் விடுவிக்கப்பட்டபோது, தனது சகோதரனும் மனைவியும் கொலை செய்யப்பட்டதை அறிகிறான். அவர்களின் மரணங்களுக்காகப் பழிவாங்கவும், அவன் கைது செய்யப்பட்டதன் காரணத்தைக் கண்டறியவும் முடிவு செய்கிறான்.

மெபூபா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி

நடிகர்கள்: சஞ்ஜய் துத், அஜய் தேவ்கன் & மனிஷா கொய்ராலா
ஒரு பணக்கார வணிகர், ஷ்ரவன், பாயலை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளிக்கிறார். ஆனால், அவளை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டப் பிறகு அவளை விட்டு விலகுகிறார். பின்னர், பாயல் கரண் என்ற கலைஞரைச் சந்திக்கிறாள். ஆனால், ஷ்ரவன் மீண்டும் தோன்றும்போது அவளுடைய உலகம் சிதைந்து போகிறது.

சொல்லி தொல (புதிய அத்தியாயங்கள் – 15-16)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, சனி-ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: யுவராஜ், ஜே.கே. விக்கி, ஹம்ஸ்னி, விடியாலியானா, அல்வின், நவீன் ஹோ & லோகன்
யுவா, நவின் மற்றும் ஆல்வின் இறுதியாக லதாவின் வீட்டிற்குள் நுழைகிறார்கள். சீன பேய்களிடையே தாத்தாவுக்கு இருக்கும் சக்தியையும் மரியாதையையும் ஆல்வின், நவின் மற்றும் யுவா உணர்ந்தனர்.

ஞாயிறு, 25 அக்டோபர்
ஜீ குடும்பம் விருதுகள் 2020 (முன்னோட்டம் – முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 235), மாலை 4 மணி [பகுதி 1 – 1 நவம்பர்] [பகுதி 2 – 8 நவம்பர்] [பகுதி 3 – 15 நவம்பர்]| ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
ஜீ குடும்பம் விருதுகள் 2020 என்பது ஜீ தமிழிற்காக நடத்தப்படும் மிகப்பெரிய வருடாந்திர நிகழ்வு. மேடையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி கலைஞர்களின் நேர்த்தியான படைப்புகள் மற்றும் அவர்களின் சிறந்த நடிப்புக்கான பரிந்துரைகள் மற்றும் விருதுகள் வழங்குதல் என பலவற்றை இந்த நிகழ்வு உள்ளடக்கும். சிவப்பு கம்பளம் காட்சிகள், ப்ளூப்பர்ஸ், கலைஞர்களின் நேர்காணல்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அற்புதமான சிறப்பம்சங்களைக் காண்பிக்கும் முன்னோட்ட அத்தியாயத்தை ரசிகர்கள் ரசிக்கலாம். அதன்பிறகு, நவம்பர் 1, 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒளிபரப்பப்படும் விருது நிகழ்ச்சியை கண்டு களிக்களாம்.

அழகின் அழகி 2020 (புதிய அத்தியாயம் – 7)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு
நீதிபதிகள்: டத்தின் மணிமாலா, ஸ்ரீ சோனிக் & தனுஜா ஆனந்தன்
இந்த அத்தியாயத்தில் போட்டியாளர்கள் தங்கள் கேட்வாக் திறன்களைக் (catwalk skills) வெளிபடுத்துவர். மேலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவர்.

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்
செவ்வாய், 20 அக்டோபர்

நேர்காணல்: தொற்றுநோய் காலகட்டத்தின் போது செய்திகள் மற்றும் தகவல்கள்
ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
விருந்தினர்: திரு. மோகனதாஸ் முனியாண்டி, ஆஸ்ட்ரோ வானொலி செய்தி பிரிவு பதிப்பாசிரியர்
குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்களின் போது செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பாக ஒரு நபர் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான விஷயங்கள் யாவை என்பதைப் பகிர்ந்து கொள்ளும் திரு. மோகனதாஸ் முனியாண்டி, ஆஸ்ட்ரோ வானொலி செய்தி பிரிவு பதிப்பாசிரியரின் நேர்காணலை ரசிகர்கள் கேட்கலாம்.

புதன், 21 அக்டோபர்
கோவிட்-19 சங்கிலியை ஒன்றாக உடைப்போம்!

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
விருந்தினர்: சபாவிலிருந்து முன் முகப்பிட பணியாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள்
கோவிட்-19 சங்கிலியை ஒன்றாக உடைப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் சபாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன் முகப்பிட பணியாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சபாவின் தற்போதைய நிலைமை குறித்த சில தகவல்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.

வியாழன், 22 அக்டோபர்
நேர்காணல்: கோவிட்-19 நோயின் அறிகுறிகள்

ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
விருந்தினர்: நிபுணர், கோலாலம்பூர் மருத்துவமனை
கோவிட்-19 நோயின் அறிகுறிகள் குறித்த குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் கோலாலம்பூர் மருத்துவமனையைச் சேர்ந்த நிபுணரின் நேர்காணலை ரசிகர்கள் கேட்டு பயன் பெறலாம்.