‘ராகாவில் நான் யார் தெரியுமா?’ போட்டியைப் பற்றின விபரங்கள்

‘ராகாவில் நான் யார் தெரியுமா?’ என்ற புத்தம் புதிய போட்டியின் வழி 28 செப்டம்பர் முதல் 16 அக்டோபர் வரை 2020 ரிம9000 வரை ரொக்கப் பரிசுகளை வெல்ல இதோ வந்து விட்டது ராகா ரசிகர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணிக்கு ரசிகர்கள் ராகாவை கேட்டல் அவசியம். ஏனெனில், கலக்கல் காலை நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்களான, சுரேஷ் மற்றும் அஹிலா ஒரு வார்த்தை விடுப்பட்ட பாடலின் வரிகளை அறிவிப்பர்.

ரசிகர்கள் பின்னர் விடுப்பட்ட வார்த்தையின் ஆக்கபூர்வமான புகைப்படத்தை எடுத்து, அதை தங்கள் இன்ஸ்டாகிராமில் #RAAGANYT என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிடுவதோடு ராகாவையும் (@raaga.my) டேக் (tag) செய்ய வேண்டும். (குறிப்பு: பங்கேற்பாளர்களின் இன்ஸ்டாகிராம் போட்டியின் காலக்கட்டத்தின் போது ‘பொது’-ஆக (public) இருத்தல் அவசியம்).

ராகா அறிவிப்பாளர்கள் பெறப்பட்ட சமர்ப்பிப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட படத்தின் விபரங்களை வானொலியில் அறிவிப்பர்.

வானொலியில் அழைப்பதற்கான சமிஞ்ஞைக் கேட்டவுடன், ராகாவிற்கு அழைக்கும் படத்தின் உரிமையாளர் முதல் போட்டியாளராக இருத்தல் அவசியம். இந்த ரசிகர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு கடவுச்சொல்லைப் பெருவர். ராகாவுடன் அழைப்பில் இருக்கும்போது அதனை அவர் பகிர வேண்டும்.

பங்கேற்பாளர்கள் பின்னர் ரிம150 ரொக்கப் பரிசை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பைப் பெறுவர். அச்சுற்றுக்கு சரியான யூகங்கள் இல்லை என்றால், ரொக்கப் பரிசு அடுத்த சுற்றில் இரட்டிக்கும்.

‘ராகாவில் நான் யார் தெரியுமா?’ போட்டியை ராகா ஏற்பாடு செய்யவே கீத்தி ஹெர்பல்ஸ் (Kytee Herbals) நிதியுதவி வழங்கி ஆதரவளிக்கின்றனர்.

மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.