ஈப்போ மார்ச் 23-

வட கிந்தா மாவட்ட நிலையில் தமிழ்ப்பள்ளிகளுக்கிடையில் நடைபெற்ற வளர்தமிழ் விழா 200 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் இறுதி சுற்றுக்கு தேர்வான போட்டியாளர்கள் அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறவிருக்கும மாநில நிலையிலானப் போட்டியில் பங்கேற்பர் .

கிளேபாங் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றப் பெற்றவர்களுக்கு இதில் சிறப்ப வருகை புரிந்த குனோங் ரப்பாட் தமிழ்பள்ளியின் வாரியக் குழு தலைவர் வழக்கறிஞர் த. இளங்கோ மற்றும் மாநிலக் கல்வி திணைக்கள தமிழ்ப்பாட பிரிவு துணை இயக்குனர் ந. சந்திரசேகரன் பரிசுகளை எடுத்து வழங்கினர்.

இதில் மேடைப் பேச்சு, கட்டுரை , , புதிர் போட்டி, கவிதை ஒப்புவித்தல் , கதை கூறும் போட்டி, பாடல் , திருக்குறள் மன்னப்போட்டி, பேச்சுப் போட்டி ஆகிய எட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வட கிந்தா தலைமையாசியர் மன்றத்தின் ஏற்பாட்டில் இப்போட்டிகள் நடைபெற்றது.

ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கோகிலவாணியுன் வரவேற்புரையுடன் தொடங்கிய  இதில் ந. சந்திரசேகரனின் சிறப்புரையும் இடம்பெற்றது. இங்கு இந்த விழா சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கிய அனைவரையும் பாராட்டினார்.

இந்தப் போட்டி சிறப்புடன் நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்ட வட கிந்தா தமிழ்ப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மன்றத் தலைவர் ஜெயக்குமார் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மாநில நிலையிலான போட்டியிலும் ஆதரவை வழங்கும்படி கேட்டுக் கொண்டார் .