எவெர்டன், டிச.19 –
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் எவெர்டன் 9 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. திங்கட்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் எவெர்டன் 3 – 1 என்ற கோல்களில் சுவான்சி சிட்டியை வீழ்த்தியது. சாம் அல்லர்டாய்ஸ் நிர்வாகியாக பொறுப்பேற்ற பின்னர் எவெர்டன் எந்த ஓர் ஆட்டத்திலும் தோல்வி காணவில்லை என்பது குறிப்பிடதக்கது.
35 ஆவது நிமிடத்தில் லெரோய் பெர் போட்ட கோலின் மூலம் சுவான்சி சிட்டி 1 – 0 என்ற கோலில் முன்னணி வகித்தது.எனினும் முதல் பாதி ஆட்டத்தின் இறுதியில் வழங்கப்பட்ட பினால்டியை கோலாக்குவதில் வெயின் ரூனி தோல்வி கண்டார். ரூனியின் பினால்டியை சுவான்சி கோல் காவலர் லுக்காஸ் பாபியன்ஸ்கி தடுத்தாலும் டாமினிக் கல்வேர்ட் அதனை கோலாக்கினார்.
இரண்டாம் பாதி ஆட்டத்தின் 64 ஆவது நிமிடத்தில் கில்பி சிகுட்ர்சன் போட்ட கோலின் மூலம், எவெர்டன் 2 – 1 என முன்னணிக்கு சென்றது. 73 ஆவது நிமிடத்தில் மீண்டும் கிடைத்த பினால்டியின் மூலம் எவெர்டன் தனது மூன்றாவது கோலைப் புகுத்தியது. இந்த வெற்றியை அடுத்து எவெர்டன் 9 ஆவது இடத்துக்கு முன்னேறியது.
