சென்னை, டிச. 20-
அண்மையில் செனட்டராக பதவி ஏற்றுக்கொண்ட ம.இ.கா.வின் தேசிய உதவித்தலைவர்களில் ஒருவரும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் (மீபா) தலைவருமான செனட்டர் டத்தோ டி.மோகனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் டத்தோ டி.மோகனை பத்மவிபூசன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
டத்தோ மோகனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தான் மலேசியாவிற்கு வருகையளிக்கும் போது நேரில் சந்திப்பதாகவும் ரஜினிகாந்த் கூறினார்.
உயரிய இடத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவருக்கு இந்த வேளையில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் டத்தோ டி.மோகன் குறிப்பிட்டார். கபாலி படத்தின் படப்பிடிப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசியாவிற்கு வந்த போது, டத்தோ டி.மோகன் தனது குடும்பத்துடன் அவரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
