Site icon அநேகன்

2019 சீ விளையாட்டுப் போட்டியில் 93 தங்கப் பதக்கங்கள் வெல்ல மலேசியா இலக்கு!

கோலாலம்பூர், டிச.20 –

2019 ஆம் ஆண்டில் பிலிப்பைன்சில் நடைபெறவுள்ள சீ விளையாட்டுப் போட்டியில் 93 தங்கப் பதக்கங்களை வெல்ல மலேசியா இலக்கு கொண்டுள்ளது. 2019 சீ விளையாட்டுப் போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுகளின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும் அந்தப் போட்டியில் இடம்பெறவிருக்கும் சில விளையாட்டுகளை வைத்து மதிப்பிடும்போது 93 முதல் 96 தங்கப் பதக்கங்களை வெல்ல முடியும் என தேசிய விளையாட்டு மன்றத்தின் விளையாட்டாளர்கள் பிரிவுக்கான இடைக்கால இயக்குனர் ஜெப்ரி காடிரீன் தெரிவித்தார்.

2017 சீ விளையாட்டுப் போட்டியில் வென்ற தங்கப் பதக்க எண்ணிக்கையை மீண்டும் அடைய முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும். வெளிநாடுகளில் போட்டியிடும் போது உபசரணை நாடுகளின் தங்களின் ஆற்றலுக்கும் சக்திக்கும் ஏற்ற விளையாட்டுகளை அறிமுகப்படுத்தும் என ஜெப்ரி கூறினார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா 144 தங்கப் பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த வெற்றியாளராக வாகை சூடியது.

Exit mobile version