Site icon அநேகன்

பொது இடத்தில் பாராங் கத்தியை வைத்திருந்த ஆர்.ஈஸ்வரனுக்கு 5 ஆண்டு சிறை; பிரம்படி

கோலாலம்பூர், டிச.20-
கடந்த ஜனவரி மாதத்தில் பொது இடத்தில் மிக நீளமான பாராங் கத்தியை வைத்திருந்த குற்றத்திற்காக இந்திய இளைஞரான ஆர்.ஈஸ்வரனுக்கு, (வயது 33) 5 ஆண்டு சிறை மற்றும் 1 பிரம்படியும் விதித்து அம்பாங் செஷன் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

87 செ.மீட்டர் நீளம் கொண்ட பாராங் கத்தியைக் கொண்டிருந்ததாக தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில் அவர் தனது வாக்குமூலத்தை மாற்றியதைத் தொடர்ந்து தொடர்ந்து நீதிபதி ஷபிரா முகமட் சைட் இத்தண்டனையை விதித்தார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கடந்த ஜனவரி 8ஆம் தேதியிலிருந்து இத்தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி கூறினார்.

ஈஸ்வரன் கடந்த ஜனவரி மாதம் அம்பாங் இண்டா, ஜாலான் பண்டான் இண்டா 5/20இல் உள்ள ஓர் அடுக்ககத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக 1958 அபாயகார ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டது. சம்பவத்தன்று ஓர் ஆடவர் அந்த அடக்குமாடி குடியிருப்பின் சாலை அருகில் தனது குடும்பத்தினருடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது காரில் வேகமாக வந்த ஈஸ்வரன் அவர்களை மோதினார். அதன் பின்னர், பாராங் கத்தியுடன் காரிலிருந்து இறங்கிய ஈஸ்வரன், அன்றைய இரவு அவர்களின் குடும்பத்திலிருந்து ஒருவர் சாவவிருப்பதாக எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
இடது கால் மற்றும் வலது கையில் பலத்த காயத்திற்குள்ளான அந்த ஆடவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பின்னர், போலீஸ் ஈஸ்வரனைப் பிடிக்க சென்ற போது, போலீசையும் ஈஸ்வரன் பாராங் கத்தியை காட்டி மிரட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Exit mobile version