Site icon அநேகன்

ஸ்பெயின் கோப்பா டெல் ரே – கடைசி நிமிட கோலால் ரியல் மெட்ரிட் வெற்றி !

மெட்ரிட், ஜன.19  –
ஸ்பெயின் கோப்பா டெல் ரே கிண்ண கால்பந்துப் போட்டியில் 89 ஆவது நிமிடத்தில் போடப்பட்ட கோலால் ரியல் மெட்ரிட் வெற்றி பெற்றுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 1- -0 என்ற கோலில் லெகானேஸ் அணியை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் ரியல் மெட்ரிட்டின் ஒரே கோலை மார்க்கோ அசென்சியோ போட்டார். லெகானேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் பயிற்றுனர் சினிடின் சிடான், முன்னணி ஆட்டக்காரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ , கேரத் பேலை களமிறக்கவில்லை.
இளம் ஆட்டக்காரர்களுக்கு அவர் வாய்ப்பு அளித்திருந்தார்.எனினும் ரியல் மெட்ரிட்டின் இளம் ஆட்டக்காரர்கள் லெகானேஸ் தற்காப்பு அரணை உடைப்பதில் கடும் சிரமத்தை எதிர்நோக்கினர். 89 ஆவது நிமிடத்தில் தியோ பெர்னான்டேஸ் கொடுத்த பந்தை அசென்சியோ கோலாக்கியதன் மூலம் ரியல் மெட்ரிட் வெற்றி பெற்றது.
சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியிருந்தாலும் தேவையான முடிவு கிடைத்திருப்பதாக சிடான் தெரிவித்துள்ளார்.  இதன் இரண்டாம் கட்ட ஆட்டம் ஜனவரி 24 ஆம் தேதி சந்தியாகோ பெர்னாபூ அரங்கில் நடைபெறவுள்ளது.
Exit mobile version