Site icon அநேகன்

பிரீமியர் லீக் – நான்கு கோல்களைப் போட்டு அசத்தினார் அகுவேரோ !

லண்டன், பிப்.11 –

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 5 – 1 என்ற கோல்களில் லெய்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டியின் முன்னணி தாக்குதல் நட்சத்திரம் செர்ஜியோ அகுவேரோ நான்கு கோல்களைப் போட்டு அசத்தியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் மென்செஸ்டர் சிட்டி இரண்டாவது இடத்தில் உள்ள மென்செஸ்டர் யுனைடெட்டைக் காட்டிலும் 16 புள்ளிகள் வித்தியாசத்தில் உள்ளது.எனினும் நியூகாசல் யுனைடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ,மென்செஸ்டர் யுனைடெட் புள்ளி வேறுபாட்டை 13 ஆக குறைக்க முடியும்.

இந்த ஆட்டத்தில் நான்கு கோல்களைப் போட்டதன் வழி செர்ஜியோ அகுவேரோ தங்க காலணிக்கான விருதில் டோடேன்ஹம் ஹோட்ஸ்பர் ஆட்டக்காரர் ஹாரி கேனை விட இரண்டு கோல்களில் பின் தங்கியுள்ளார் எத்திஹாட் அரங்கில் நடந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 3 ஆவது நிமிடத்தில் ரஹீம் ஸ்டேர்லிங் மூலம் முதல் கோலைப் போட்டது. எனினும் ஜேமி வார்டி மூலம் லெய்செஸ்டர் சிட்டி ஆட்டத்தை சமப்படுத்தியது.

இரண்டாம் பாதியில் அதிரடியாக விளையாடிய மென்செஸ்டர் சிட்டி அகுவேரோ மூலம் நான்கு கோல்களைப் போட்டது. பிப்ரவரி மாதத்தில் 70 புள்ளிகளைப் பெற்றிருப்பது மிகப் பெரிய சாதனை என மென்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார், குறிப்பாக பெர்ன்லி அணியுடன் சமநிலைக் கண்டப் பின்னர் தமது அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது மகிழ்ச்சியைத் தருவதாக குவார்டியோலா கூறினார்.

Exit mobile version