Site icon அநேகன்

கோலசிலாங்கூர், கம்போங் சுங்கை யூ நில விவகாரம்: இறுதி கட்டத்தில் விசாரணை!

ஷா ஆலம், பிப்.11-
கோலசிலாங்கூரிலுள்ள கம்போங் சுங்கை யூ நிலம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ சூல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

விசாரணை அடுத்த மாதத்திற்குள் முடிந்துவிடும் என எதிர்ப்பார்க்கிறோம். அந்த விசாரணை அறிக்கை பின்னர் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் மேல்கட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்படும் என கூட்டரசு விவசாய விற்பனை வாரியம் (ஃபாமா) மலேசிய மீன்ப்பிடித்துறை மேம்பாட்டு வாரியம், எஸ்.பி.ஆர்.எம். ஆகியவற்றுடன் இணைந்து நடத்திய சமையல் செலவுகளை மிச்சப்படுத்துவோம் எனும் நிகழ்ச்சியைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறினார்.

இதற்கு முன்னர் சிலாங்கூரின் ஆற்றல், பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான சிறப்பு செயற்குழு நில அலுவலகம், சிலாங்கூர் மாநில நிலம் மற்றும் சுரங்க அலுவலகம் ஆகியவற்றின் தகவல்களை ஆராய்ந்ததில் கம்போங் சுங்கை யூ நிலம் வழங்கப்பட்டதில் விதிமுறை மீறல்கள் நிகழ்ந்துள்ளதை உறுதி செய்ததாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிகழ்ச்சியில் ஃபாமாவின் தலைமை இயக்குநர் டத்தோ அஹ்மாட் இஷாக், மலேசிய மீன்ப்பிடித்துறை மேம்பாட்டு வாரியத்தின் தலைமை இயக்குநர் டத்தோ முஹம்மட் சாயேடோன் அப்துல் மஜிட் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Exit mobile version