Site icon அநேகன்

கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதியின் மனிதநேயம்!

கப்பாளா பத்தாஸ், பிப்.12-

கடந்த ஜனவரி மாதம் நிகழ்ந்த சாலை விபத்தினால் மூளை செயல் இழந்த நிலையில் இருக்கும் கேஷந்திரனுக்கு ( 22 வயது ) கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதி உதவிகளை வழங்கியது. கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதியின் இளைஞர் பிரிவில் துடிப்புமிக்க ஓர் உறுப்பினராக வலம் வந்த கேஷந்திரன் புத்தாண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் காயம் அடைந்தார்.

இந்த சாலை விபத்தால் கேஷந்திரன் , மூளை செயல் இழந்த நிலையில் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரின் நிலையை நேரில் கண்ட கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதி அவரின் குடும்பத்தினருக்கு ஆயிரம் ரிங்கிட் ரொக்கப் பணத்தை வழங்கியதுடன் 500 ரிங்கிட் மதிப்புடைய மருத்துவ பொருட்களையும் வழங்கியது.

கேஷந்திரனின் நிலையைக் கண்டு தாம் வருத்தம் அடைவதாக கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதித் தலைவர் வேலாயுதம் தெரிவித்தார். கட்சியில் துடிப்புமிக்க உறுப்பினர்களில் ஒருவராக இருந்த கேஷந்திரனுக்கு தொடர்ந்து தேவைப்படும் உதவிகளை வழங்க கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதி தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கேஷந்திரனின் தந்தை ஒரு லாரி ஓட்டுநர். தமது மகனின் நிலையைக் கண்டு உதவி புரிய முன் வந்த கப்பாளா பத்தாஸ் மைபிபிபி கட்சிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக அவர் கூறினார். கப்பாளா பத்தாஸ் மைபிபிபி தொகுதியின் இளைஞர் பிரிவு முன்னெடுத்த முயற்சிகளில் ஒன்றாக இந்த உதவி முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது என வேலாயுதம் தெரிவித்தார்.

Exit mobile version