Site icon அநேகன்

பிப்.18இல் கோலசிலாங்கூர், எங் ஹோங் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்!

கோலசிலாங்கூர், பிப்.12-
எங் ஹோங் தோட்டத்திலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வருகின்ற பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 9.30 முதல் 10.30 வரை மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

இந்த கும்பாபிஷேகத்தில் சுற்று வட்டாரத்திலுள்ள பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டு எல்லாம் வல்ல அம்பிகையின் பேரானந்தப் பேரருளைப் பெற வேண்டுவதாக ஆலயத் தலைவர் உத்தமன் வேலு கேட்டுக்கொண்டார்.

ஆலயத் தலைவர் உத்தமன் வேலு

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை இரவு வரையில் பல பூஜைகள் நடைபெறும். 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 6.00க்கு பூர்வாங்க பூஜை, பிம்பசுத்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், தத்வார்ச்சனை, நாடிசந்தானம், ஸ்பர்ஷாகுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யத்ராதானம், கடம் புறப்பாடு முதலானவை நடைபெறும்.

காலை மணி 9.30 முதல் 10.30 வரை விமானம் மற்றும் மூலாலய மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, தசமங்கள தரிசனம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் முதலானவை இடம்பெறும். நண்பகல் மணி 12.00க்கு விஷேச பூஜை, அன்னதானமும் அர்ச்சனைகளும் நடைபெறும். இந்த கும்பாபிஷேகத்தை சிவ ஸ்ரீ வ.ர.சந்திரசேகர சிவாச்சாரியார் (அப்போய்), சிவ ஆகம செல்வர் சிவ ஸ்ரீ ஜெயகணேஸ் சிவாச்சாரியார், காப்பார் மற்றும் ஏனைய ஸ்ரீ மூடா குருமார்கள் நடத்தி வைப்பார்கள்.

இந்த கும்பாபிஷேகத்தில் ம.இ.கா. தஞ்சோங் காராங் தொகுதி தலைவர்டத்தோ என்.எஸ்.கிருஷ்ணன், எங் ஹோங் தோட்ட நிர்வாகி லீ கிம் ஓங், தொழிலதிபர் மதிப்புமிகு சு.முனியாண்டி-சு.தமிழரசி குடும்பத்தினர் முதலானோர் கலந்துக்கொள்ளவிருப்பதாக உத்தமன் குறிப்பிட்டார்.

மேல்விவரங்களுக்கு உத்தமன் வேலு (019-3889803), தியாகராஜா நடராஜா (012-3680130), பாலகிருஷ்ணன் (010-2002991) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

Exit mobile version