Site icon அநேகன்

நாளை மாலையில் அன்வார் விடுதலையாகக்கூடும்! நூருல் இசா

செராஸ், மே 14-
நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அரச மன்னிப்பு வழங்குவது குறித்து விவாதிப்பதற்கு பொது மன்னிப்பு வாரியம் நாளை மாலை மணி 5.00க்கு கூடவிருக்கின்றது.

ஆயினும், அன்வாருக்கு அரச மன்னிப்பு வழங்குவதற்கான நடைமுறை எவ்வளவு நேரம் நடைபெறும் என கணிக்க முடியவில்லை என அன்வாரின் மூத்த மகளும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா தெரிவித்தார்.

எனினும், அன்வாருக்கு நாளை அரச மன்னிப்பு கிடைக்கப்பட்டு அவர் விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக இன்று அன்வாரை செராஸ் புனர்வாழ்வு மருத்துவமனையில் சந்தித்து விட்டு செய்தியாளர்களைச் சந்தித்த நூருல் இசா கூறினார்.

எனக்கு அன்வாரின் வழக்கறிஞர் இந்த தகவலை வழங்கினார். இதுவரையில் இந்த தகவல் மட்டுமே எனக்கு தெரியும். அன்வார் வெளிவந்த பிறகு நாளை செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவார் என தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் சொன்னார்.

Exit mobile version