கோலாலம்பூர், மே 14-
தேசிய முன்னணி அரசாங்கம் அறிமுகப்படுத்திய பொய் செய்தி தடுப்பு சட்டத்தை நம்பிக்கை கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால் அகற்றும் என மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவில் கொண்டு அந்த சட்டத்தை புதிய அரசாங்கம் அகற்ற வேண்டுமென பி.கே.ஆர். கட்சியின் உதவித் தலைவர் நூருல் இசா வலியுறுத்தினார்.
பொய் செய்தி தடுப்பு சட்டம் கடுமையான தன்மைக் கொண்டது. அது அகற்றப்பட வேண்டும். இந்த கடுமையான சட்டம் அகற்றப்படும் என மக்களுக்கு நாம் வாக்குறுதி அளித்துள்ளோம் என இன்று தனது டுவீட்டர் பக்கத்தில் நூருல் இசா பதிவிட்டுள்ளார்.
நேற்று ஆர்.டி.எம்மில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேரடியாக அளித்த நேர்க்காணலில் பொய் செய்தி தடுப்பு சட்டத்திற்கு தெளிவான புதிய வரையறை வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அரசாங்கத்திற்கு ஆதரவு இல்லாத செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனங்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என உத்தரவாதம் அளித்த துன் மகாதீர், அந்த செய்திகள் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
மேலும், பொய் செய்தி தடுப்பு சட்டத்தை அரசாங்கம் அகற்றுமா அல்லது அதில் சட்டத்திருத்தம் ஏற்படுத்தப்படுமா அல்லது புதிய சட்டம் கொண்டு வரப்படுமா என்பது குறித்து துன் மகாதீர் தெளிவான விளக்கத்தைத் தரவில்லை.
இதற்கு முன்னர், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியமைத்தால் பொய் செய்தி தடுப்பு சட்டம் அகற்றப்படும் என துன் மகாதீர் உறுதியளித்திருந்தார்.
The anti fake news law, which is thoroughly draconian in nature, should be repealed. Janji kita kpd rakyat, untuk mansuh undang-undang drakonian https://t.co/Wll84z1FYE
— Nurul Izzah (@n_izzah) May 14, 2018

