Site icon அநேகன்

பூச்சோங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை

கோலாலம்பூர், மே 14-
கோலாலம்பூர் கே.எல்.சி.சி.யில் ஐதேக்ஸ் நிறுவன ஏற்பாட்டில் நடைபெற்ற 29-வது அனைத்துலக புத்தாக்க கண்டுபிடிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பூச்சோங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இந்தப்பள்ளியை பிரதிநிதித்து இரண்டு குழுக்கள் களம் இறங்கிய நிலையில் இயற்கை முறையிலான பேஸ்மாக் கண்டுபிடிப்பில் திவ்யன் மோகன்,ரியாஸ்ரீ ஸ்ரீதரன், தர்ஷனா சிவபாலன், விலாஷிகா விஜயகுமார், கீர்த்திராஜ் கோபிகிருஷ்ணா, ஆகியோர் அடங்கிய குழு தங்கம் மற்றும் சிறந்த புத்தாக்கத்திற்கான சிறப்பு விருதினையும் வென்றனர்.

மற்றொரு குழுவான மருதவாணன் ரகுராமன், ஹரீஷ்குமார்சாய் அறிவழகன், சுபாஷினிவிமலன், நிக்கீஷ் விஜயன், தேவிகா ராஜ்குமார், ஆகியோர் வெஜ் டி-ஜேக் கண்டுபிடிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்று பள்ளிக்கு பெருமை தேடித்தந்தமைக்கு பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.மதியழகன் அவர்கள் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

Exit mobile version