Site icon அநேகன்

ஜே லோவ் எங்கே இருக்கிறார் என எங்களுக்குத் தெரியும் – துன் மகாதீர்

புத்ராஜெயா, மே.14 – 

ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல்கள் தொடர்பில் தேடப்பட்டு வரும் பிரபல வர்த்தகர் ஜே லோ எங்கே இருக்கிறார் என தெரியும் என பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முஹமட் தெரிவித்துள்ளார். எனினும் அவரை மலேசியாவுக்கு கொண்டு வருவதற்காக இன்டர்போல் எனப்படும் அனைத்துலக போலீஸ் உதவியை அரசாங்கம் இன்னும் கோரவில்லை என மஹாதீர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

14 ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சி இழப்பதற்கான காரணங்களில் ஒன்றாக கூறப்படும் ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் ஊழலில் ஜே லோவ் மிக முக்கியமான நபராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நிறுவனத்தின் ஊழலில் ஜே லோவுக்கு சம்பந்தமில்லை என முந்தைய அரசாங்கம் கூறி வந்தாலும், அமெரிக்க நீதித்துறை அவரின் உல்லாச படகை கடந்த மார்ச் மாதம் இந்தோனேசியாவில் பறிமுதல் செய்தது.

Exit mobile version