Site icon அநேகன்

அமைச்சரவையை நானே முடிவு செய்வேன் – துன் மகாதீர்

புத்ராஜெயா, மே.14

14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தமது தலைமையில் அமைய விருக்கும் அமைச்சரவை உறுப்பினர்களை தாமே முடிவு செய்யவிருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை நாட்டின் 7 ஆவது பிரதமராக பதவியேற்ற துன் டாக்டர் மகாதீர், சனிக்கிழமை மூன்று ,முக்கிய அமைச்சுகளுக்கான அமைச்சர்களை அறிவித்தார்.

இந்நிலையில் தொடக்க கட்டமாக 10 அமைச்சுகளைக் கொண்டு அரசாங்கம் நிர்வாகம் தொடரும் என அவர் தெரிவித்திருந்தார். உள்துறை அமைச்சராக டான்ஸ்ரீ முகிடின் யாசின் நியமிக்கப்பட்ட வேளையில், லிம் குவான் எங், நிதி அமைச்சராகவும், அமானா கட்சியின் தலைவர் மாட் சாபு தற்காப்பு அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் எஞ்சிய ஏழு அமைச்சர்களை இன்னும் ஓரிரு நாளில் முடிவு செய்ய போவதாக டாக்டர் மகாதீர் கூறினார்.

குறிப்பாக பி.கே.ஆர் கட்சியிடம் தாம் மூன்று பெயர்களைக் கோரியிருந்த வேளையில் அந்த கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அசிசா தம்மிடம் 10 பெயர்களை வழங்கியுள்ளதாக கூறினார். எனினும் அதில் யாருக்கு அமைச்சர்  பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் வான் அசிசா தம்மிடம் குறிப்பிட்ட சொன்னதாக மகாதீர் தெரிவித்தார்.

அமானா கட்சியின் தலைவர் மாட் சாபு, தம்மிடம் மூன்று பெயர்களை பரிந்துரைத்துள்ளதாகவும் மகாதீர் தெரிவித்தார். அதிக பட்சமாக 25 அமைச்சுகளை உள்ளடக்கிய அமைச்சரவையை தாம் அமைக்கப் போவதாக மகாதீர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version