சென்னை:
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் மரணம் அடைந்தார் ஸ்ரீ தேவி. அவருக்கு மகாராஷ்டிரா மாநில அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு குறித்து ஆவணப்படம் எடுக்க அவரின் கணவர் போனி கபூர் திட்டமிட்டுள்ளார்.
பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிக அளவில் எடுக்கப்படுகிறது. அந்த படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதை பார்த்து தான் தமன்னாவுக்கு ஸ்ரீதேவியாக நடிக்கும் ஆசை வந்துள்ளது. ஸ்ரீதேவி மட்டும் அல்ல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவாக நடிக்கும் ஆசையும் ஏற்பட்டுள்ளது.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து பெயர் வாங்கினார் வித்யா பாலன். நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷை அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாலிவுட் சென்ற ஸ்ரீதேவிக்கு முதன்முதலில் ஹிட்டான படம் ஹிம்மத்வாலா. அந்த படத்தின் ரீமேக்கில் ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்தில் நடித்தவர் தமன்னா என்பது குறிப்பிடத்தக்கது.

