சென்னை:
காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் தமிழக மக்களை விளாசியுள்ளார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமான ஜூலி தற்போது அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். அதுவும் தனிக் கட்சி துவங்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஜூலி. ஜூலி காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் தமிழக மக்களை விளாசியதுடன் விரைவில் களத்தில் சந்திக்கப் போவதாக தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் ஜூலி.
கேள்வி தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் அள்ளிவிடும் வாக்குறுதிகளை பதவிக்கு வந்த பிறகு நிறைவேற்றாவிட்டாலும் நாம் எந்த கேள்வியும் கேட்பது இல்லை என்பதை முகத்தில் அறையாத குறையாக பேசியுள்ளார் ஜூலி.
ஜூலியின் வீடியோவை பார்த்துவிட்டு வழக்கம் போன்று திட்டுவோர் திட்டுகிறார்கள், ஆதரிப்போர் ஆதரிக்கிறார்கள். கடவுளே ஜூலி தொல்லை தாங்க முடியவில்லை என்று கடவுளிடம் ஒருவர் குமுறுகிறார்.
நாம் மேலும் மேலும் வாக்குறுதிகளை போர்க்களத்தில் நாம் சந்திக்கலாம் #tamilnadu pic.twitter.com/J96951hpwT
— எம் ஜூலி (M JULEE) (@lianajohn28) May 13, 2018

