Site icon அநேகன்

விஜய் பட ஷூட்டிங்கில் மகிழ்ச்சியுடன் கலந்துக்கொண்ட நடிகை சாவித்ரி

சென்னை:

கீர்த்தி சுரேஷ் ‘நடிகையர் திலகம்’ சாவித்ரியாக நடித்து சமீபத்தில் வெளியான ‘நடிகையர் திலகம்’ @ ‘மகாநதி’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் கீர்த்தியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ‘நடிகையர் திலகம்’ படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்திருக்கும் கீர்த்தியை எஸ்.எஸ்.ராஜமௌலி, கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், தனது அடுத்த பட ஷூட்டிங்கில் இணைந்துள்ளார் கீர்த்தி.

‘பைரவா’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக விஜய்க்கு ‘விஜய் 62’ படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் பாடல் காட்சி ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ஶ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைக்கும் பாடல் காட்சி ஷூட்டிங்கில் இணைந்துள்ளார் கீர்த்தி.

‘நடிகையர் திலகம்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விஜய்யும் கீர்த்தி சுரேஷை பாராட்டியுள்ளாராம். இதனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறாராம் கீர்த்தி.

Exit mobile version