Site icon அநேகன்

சரவா ஆளுநர் டான் ஸ்ரீ தாயிப் மீது நடவடிக்கை எடுங்கள் – டத்தோ அம்பிகா

கோலாலம்பூர் , மே.15 – 

சரவா மாநில ஆளுநர் டான் ஸ்ரீ தாயிப் மாஹ்மூட் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட்டும் அரசாங்கமும் தயங்ககூடாது என தேசிய மனித உரிமை சங்கத்தின் தலைவர் டத்தோ அம்பிகா ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். சரவா முன்னாள் முதலமைச்சரான டான் ஸ்ரீ தாயிப் மாஹ்மூட் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதை அம்பிகா சுட்டி காட்டினார்.

14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பொறுப்பேற்றுள்ள புதிய அரசாங்கம் டான் ஸ்ரீ தாயிப் மீது குற்றஞ்சாட்ட வேண்டும். இல்லையென்றால் இந்த அரசாங்கமும் பழைய  தேசிய முன்னணி அரசாங்கத்தைப் போன்றதுதான் என அம்பிகா பி.எப்.எம் வானொலியில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் டான் ஸ்ரீ தாயிப் மாஹ்மூட், கோலாலம்பூரில் துன் டாக்டர் மகாதீர் சந்தித்ததாக கூறப்படுகிறது. தாயிப் மாஹ்மூட் மீது குற்றஞ்சாட்ட போதுமான ஆதாரங்கள் , உள்நாட்டில் மட்டும் அல்ல வெளிநாட்டிலும் உள்ளன.  நாட்டின் சட்டத்தை மீண்டும் மாண்புறச் செய்வோம் என கூறும் புதிய அரசாங்கம்,  தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தாயிப் மாஹ்மூட் விவகாரத்தில் மட்டும் ஒரு தலைப் பட்சமாக நடந்து கொள்ளக்கூடாது என அவர் சொன்னார்.

 

Exit mobile version