Site icon அநேகன்

அன்வார் விடுதலையை முன்னிட்டு பி.கே.ஆர். புடவையில் தோன்றிய தேவமலர்!

கோலாலம்பூர், மே 15-
மாமன்னரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகவிருக்கும் முன்னாள் எதிர்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை வரவேற்பதற்காக பி.கே.ஆர். கொடியினால் உருவாக்கப்பட்ட புடவை அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் தேவமலர் ஆறுமுகம் (வயது 45).

அன்வாரின் விடுதலையை முன்னிட்டு அவரை வரவேற்பதற்காக பலர் செராஸிலுள்ள புனர்வாழ்வு மருத்துவமனையில் வந்த நிலையில், அவர்களில் தேவமலர் சற்று வித்தியாசமாக காட்சியளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஷா ஆலமிலுள்ள ஒரு மின்னியல் தொழிற்சாலையில் வேலை செய்துவரும் தாம் விடுதலையாகவிருக்கும் அன்வாரை வரவேற்பதற்காக விடுமுறை எடுத்த செராஸ், புனர்வாழ்வு மருத்துவமனைக்கு காலை மணி 8.00 அளவில் வந்தேன். ஆனால், இங்கு வந்த பிறகுதான் அன்வார் நாளை விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

புடவை இந்தியர்களின் பாரம்பரியத்தின் அடையாளம். ஆட்சி மாற்றம் மற்றும் புதிய அரசாங்கம் அமைந்துள்ளதை நாம் அனைவரும் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றோம். அதனால்தான், அன்வாரின் விடுதலையின் போது புடவையில் வர வேண்டுமென தாம் முடிவெடுத்ததாக மேடை நாடக கலைஞருமான தேவமலர் கூறினார்.

அன்வார் நாளைதான் விடுதலையாகவிருப்பதால் நாளை மீண்டும் விடுமுறை எடுத்துக்கொண்டு இதே புடவையில் அவரை வந்து சந்திக்கலாமா என யோசித்து வருவதாக 4 பிள்ளைகளுக்கு தாயுமான அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version