Site icon அநேகன்

விரைவில் நஜீப் மீது வழக்கு தொடுக்கப்படும்! துன் மகாதீர்

புத்ராஜெயா, மே 15-
இன்னும் குறுகிய காலத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீது வழக்கு தொடுக்கப்படும் என நம்பப்படுவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.

விசாரணையின் முடிவைப் பொறுத்தே நஜீப்பிற்கு சிறையில் தண்டனை வழங்கப்படும் என அவர் கூறினார்.

வழக்கு இன்றி, நாங்கள் விசாரணைகள் இன்றி நஜீப்பை தடுத்து வைக்க முடியாது என துன் மகாதீர் கூறியதாக ரியூட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நம்பிக்கை கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றினால் 1எம்.டி.பி முறைகேடு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என துன் மகாதீர் வாக்குறுதி அளித்திருந்தார். தன்னைத் தொடர்புபடுத்தி கூறப்பட்டு வந்த 1எம்.டி.பி முறைகேட்டை நஜீப்பும் தொடக்கத்திலிருந்து மறுத்து வந்தார்.

தற்போது, நஜீப் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முன்னர் அது தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக, அனைத்து அமைச்சுகளிலும் எவ்வித ஆவணங்களும் வெளியே கொண்டு போகக்கூடாது அல்லது அழிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் துன் மகாதீர் இதற்கு முன்பு கூறியிருந்தார்.

Exit mobile version