கோலாலம்பூர், ஆக. 28
கருவூலத்தின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் பாக்கார் டான்ஸ்ரீ முகமட் டான்ஸ்ரீ அலி ஹம்சாவுக்குப் பதிலாக புதிய தலைமைச் செயலாளராகப் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பதவியிலிருந்த டான்ஸ்ரீ அலி ஹம்சாவுக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை இஸ்மாயில் பாக்காரிடம் ஒப்படைப்பார் என தெரிகிறது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை பிடித்ததிலிருந்து சில இலாகா தலைவர்கள் பதவியிலிருந்து அகற்றப்பட்டனர். ஆனால், அதில் அலி ஹம்சாவின் பெயர் விடுபட்டிருந்தது.
இஸ்மாயில் பாக்கார் முன்னாள் கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளாரான டான்ஸ்ரீ இர்வான் செரிகாருக்குப் பதிலாக இவ்வாண்டு ஜூன் மாதமே பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தது.

