பெட்டாலிங் ஜெயா, செப். 1
அரசாங்கத்தின் நிதிக் கணக்கியல் பற்றி நிதியமைச்சர் லிம் குவான் எங்கிற்கு தெரியாது என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆட்சியில் அதிகமாக வசூலிக்கப்பட்ட வரியை அதற்கான பட்டியலில் வைக்காமல், பொதுப் பட்டியல், வருமானம் என்று கணக்கிட்டு வைத்திருந்ததாக குவான் எங்கிம் குறிப்பிட்டதை மறுத்து அவர் இதனை குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கும் தனியார் நிறுவனத்திற்கும் கணக்கியில் நடைமுறை வேறுபட்டிருக்கிறது. அரசாங்கத்தில் திருத்தியமைக்கப்பட்ட ரொக்கம் கணக்கிடப்படுகிறது. எனினும், தனியார் நிறுவனங்களில் அது அடுத்தாண்டுக்குக் கொண்டு செல்லப்படும் கணக்காகக் கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.
அரசாங்கத்தில் திருத்தியமைக்கப்பட்ட ரொக்க கணக்கியலில் எல்லா நிதியும், வரவும் செலவும், அதே ஆண்டில் குறிப்பிடப்படும். அதில் கடன்களும் சொத்துகளும் அந்த அண்டிற்கான அறிக்கையில் குறிப்பிடப்படுவதில்லை என்று அவர் விளக்கமளித்தார்.
இதனால்தான் குவான் எங் முந்தைய ஆட்சியின் கணக்கியலை தவறாகப் புரிந்து கொண்டு குவான் எங் அறிக்கை விடுவதாக நஜீப் குறிப்பிட்டார்.

