Site icon அநேகன்

டோப் ஆப்பிற்கு எஸ்எஸ்டி: அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளது! கோபிந்த் சிங்

கோலாலம்பூர், செப்.2-

பிரிபெய்டு கார்டுகளுக்கு எஸ்எஸ்டி விதிக்கப்படுவதாகப் பயனீட்டாளர்களிடமிருந்து பெற்ற புகாரை தொடர்புப் பல்லூடக அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாக அமைச்சர், கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

இது உண்மையில் அமைச்சின் கவனத்தில் இருப்பதால் இதற்கான அறிக்கை இன்னும் குறுகிய காலத்தில் வெளியிடப்படும் என்று தமது டுவீட்டரில் இப்பிரச்னை குறித்து ஒரு பயனர் கேட்ட கேள்விக்கு கோபிந்த் சிங் கருத்துரைத்தார்.

இந்த எஸ்எஸ்டி அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தாங்கள் வாங்கிய பிரிபெய்ட் கார்டில் ஒரு குறிப்பிட்டத் தொகை நீக்கப்பட்டதில் அவர்கள் அதிருப்தி கொண்டனர்.

எஸ்எஸ்டியின் கீழ் பிரிபெய்ட் கார்டுகளுக்கும் 6 விழுக்காடு சேவை வரி விதிக்கப்படுகிறது.

Exit mobile version