கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் 5 வாரங்களில் முடிவடையப்போகின்றது. இந்நிலையில் பிக் பாஸ் போட்டியின் வெற்றியாளராக வருவார்கள் என மக்கள் கணித்த பலர் அவ்வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்கள்.
அந்த வரிசையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து டேனி வெளியாகியுள்ளார். கடந்த வாரம் வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் பட்டியலில் ஐஸ்வர்யா இருந்தார். அவரை பிக் பாஸ் காப்பாற்றினார். இதனால் மஹத் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அதேபோல் இந்த வாரமும் ஐஸ்வர்யா வெளியேற்றுபவர்களின் பட்டியலில் இருந்தார். அவரை யாஷிகா காப்பாற்றினார். இதனால் ஒவ்வொரு வாரமும் திட்டமிட்டு ஐஸ்வர்யா காப்பாற்றப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த முறை பாலாஜி, ஜனனி, டேனி ஆகிய 3 பேர் மட்டுமே வெளியேற்றப்படும் பட்டியலில் இருந்ததால், வேறு வழியில்லாமல் டேனி இப்போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் தொடங்கியதும் அனைவரது கவனத்தை ஈர்த்த டேனி பின்னாளில் யாஷிகா, ஐஸ்வர்யாவுடன் இணைந்ததால், ரசிகர்களுக்கு அவரை பிடிக்காமல் போனது. இந்த வாரம் டேனி வெளியேறிவிட்டார்.
வீட்டிலிருக்கும் மீதமுள்ள 7 பேரில் ரித்விகா அல்லது மும்தாஜ் தான் பிக் பாஸ் பட்டத்தை வெல்வார்கள் என கூறப்படுகின்றது.

