ஷா ஆலம், செப் 4
இப்போதைக்கு சிலாங்கூர் மாநிலத்தில் குடிநீர் கட்டண உயர்வு இல்லை என்று சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இருப்பினும், இந்த குடிநீர் கட்டணம் உயரத்தப்பட வேண்டுமா என்பது குறித்து அவ்வப்போது ஆராயப்படும் என்று அவர் சொன்னார்.
ஆகக் கடைசியாக, கடந்த 2006ஆம் ஆண்டு குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது. சிலாங்கூர் அரசு தங்களது விருப்பப்படி குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.
குடிநீர் சம்பந்தப்பட்ட எந்த விவகாரமாக இருந்தாலும் தேசிய குடிநீர் சேவை ஆணையம் மற்றும் மத்திய அரசாங்கத்துடன் விவாதிக்கப்பட வேண்டும். அதே வேளையில், மாநில அரசாங்கம் ஒரு தலைபட்சமாக செயல்பட முடியாது என இன்று சட்டமன்ற கூட்டத்தில் சுங்கை துவா பிகேஆர் சட்டமன்ற உறுப்பினருமான அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மக்களுக்கான 20 கன மீட்டர் குடிநீரை மாநில அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.

