பலாக்கோங், செப்.5
பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தலில் முதன் முறையாக தனது சொந்த சின்னத்தில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் எளிதில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
தேர்தல் பிரசாரங்களின் போது வாக்காளர்கள் ஆர்வமில்லாமல் இருந்தபோதிலும் பக்காத்தான் ஹராப்பான் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் சனிக்கிழமை நடைபெறும் பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தலில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களே தங்கள் கடமையை நிறைவேற்றுவர் என்றும் 14ஆவது பொதுத் தேர்தலைக் காட்டிலும் இந்த இடைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டமாட்டார்கள் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
.
தேர்தல் முடிவு எப்படி அமைந்தாலும் இது சிலாங்கூர் சட்டமன்றத்தில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வரப் போவதில்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.

