புத்ராஜெயா, செப்.5
எச்எஸ்ஆர் எனப்படும் கோலாலம்பூர் அதிவிரைவு இரயில் திட்டத்தை ஒத்தி வைப்பதற்கு சிங்கப்பூருக்கு 4.5 கோடி வெள்ளியை மலேசியா வழங்கும் என்று பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
இந்த எச்எஸ்ஆர் திட்டம் குறித்து சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர், காவ் பூன் வானுடன் கடந்த மாதம் 30ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியதில் அடுத்தாண்டு ஜனவரி 31ஆம் தேதி கட்டாயம் செலுத்த வேண்டிய தொகையை மலேசியா ஏற்பதில் இரு நாட்டு அரசுகளும் ஒப்புக் கொண்டன.
இதில் அடுத்தாண்டு ஜனவரிக்கு முன்பாக இத்தொகையைச் செலுத்த மலேசியாவுக்கு வாய்ப்பளித்த காவிற்கு அஸ்மின் அலி தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இத்திட்டத்தை எதிர்வரும் 2020 மே 31ஆம் தேதி வரை ஒத்தி வைப்பதற்கானக் ஒப்பந்த கடிதத்தில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
முன்னதாக எச்எஸ்ஆர் திட்டத்தை ரத்துச் செய்தால் சிங்கப்பூருக்கு 50 கோடி வெள்ளி இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இதற்கு முன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

