Site icon அநேகன்

ஜோ லோ என்னைத் தொடர்பு கொள்ள முயன்றார் – டாயிம் சைனுடின் !

கோலாலம்பூர், செப்.6-

1 எம்.டி.பி எனப்படும் ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான விவகாரத்தில் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய வர்த்தகரான ஜோ லோ தம்மை தொடர்பு கொள்ள முயன்றதாக நம்பிக்கைக் கூட்டணியின் பெருமக்கள் மன்றத்தின் தலைவர் துன் டாயிம் சைனுடின் தெரிவித்துள்ளார்.

1 எம்.டி.பி விவகாரத்தில் தவறு இழைக்கவில்லை என்றால், உடனடியாக நாடு திரும்புமாறு தாம் ஜோ லோவைக் கேட்டு கொண்டதாக டாயிம் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதம் தாம் சீனாவுக்கு சென்றிருந்தபோது, 1 எம்.டி.பி விவகாரத்தில் உதவ தயாராக இருப்பதாக ஜோ லோ தம்மிடம் தெரிவித்ததாக டாயிம் தெரிவித்தார்.

எனினும் ஜோ லோவின் கோரிக்கையை தாம் ஏற்கவில்லை என்றும் அவர் சொன்னார். டிவி 3 தொலைக்காட்சி அலைவரிசையில்  நேற்றிரவு ஒளியேறிய மக்கள் பிரச்சினைகள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது டாயிம் சைனுடின் இவ்வாறு தெரிவித்தார். 1 எம்.டி.பி நிறுவனத்தில் நடந்த  அனைத்து முறைக்கேடுகளுக்கும் ஜோ லோதான் சூத்திரதாரி என டாயிம் தெரிவித்தார்.

அந்த நிறுவனத்தை அபுதாபி, சவூதி அரேபியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஹாங் காங், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து என பல்வேறு நாடுகளுக்கு கொண்டு சென்றதும் ஜோ லோ தான் என அவர் சொன்னார். சி.என்.என்., பிபிசி போன்ற அனைத்துலக ஊடகங்கள் இந்த விவகாரத்தைப் பற்றி செய்திகளை வெளியிட்டிருந்தன.

ஆனால் மலேசியாவில் மட்டுமே 1 எம்.டி.பி நிறுவனம் குறித்து பேச தடை விதிக்கப்பட்டது. கடைசியில் மக்களுக்கு அனைத்தும் தெரிந்து விட்டது. பொய்களைப் பேசி என்ன செய்யப் போகிறோம் என டாயிம் கேள்வி எழுப்பினார்.

Exit mobile version