Site icon அநேகன்

பலாக்கோங்-ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தல்; வாக்காளர்களுக்கு கால அவகாசம்-விடுமுறை

புத்ராஜெயா, செப். 7
பலாக்கோங்-ஸ்ரீ செத்தியா சட்டமன்ற தொகுதிகளில் நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் தொழிலாளர்கள் வாக்களிக்கச் செல்ல முதலாளிகள் அனுமதிக்க வேண்டும் என மனிதவள அமைச்சு கேட்டுக் கொண்டது.

1954ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் சட்டம் பிரிவு 25 (1)இன் கீழ் தொழிலாளர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படுகிறது. தொழிலாளர்கள் வாக்களிக்கச் செல்வதற்கு முதலாளிகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அமைச்சு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் வாக்களிக்க வெகு தூரம் செல்லவிருக்கு தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.

வாக்களிக்கச் செல்லும் தொழிலாளர்கள் வேலைக்கு வரத் தவறினால் அவர்களின் சம்பளத்தை வெட்டவோ அல்லது தண்டனை வழங்கவோ கூடாது என்று அது கூறியது.

விதிமுறைகளை மீறும் முதலாளிகளுக்கு வெ.5,000 அபராதம் அல்லது ஓராண்டு சிறை விதிக்கப்படலாம்.

Exit mobile version