Site icon அநேகன்

தேர்தல் பரப்புரை காலம்; மறுமதிப்பீடு செய்யப்படுமா?

கோலாலம்பூர், செப். 8
தேர்தல் ஆணையம் தேர்தல் பரப்புரைகளுக்கு 21 நாள்களை ஒதுக்குவது பொருத்தமானதா என்பதை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக தேர்தல் ஆணையத்தின் செயலாளர் முகமட் இலியாஸ் அபு பக்கார் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற பலாக்கோங் மற்றும் ஸ்ரீசெத்தியா இடைத்தேர்தல்களில் எப்போதும் இல்லாத அளவுக்குப் பரப்புரைக்கு மிக நீண்ட காலமாக 21 நாள்கள் அளிக்கப்பட்டதற்கு பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்பட்டதாக இன்று காலை பலாக்கோங் இடைத்தேர்தல் வாக்களிப்பு மையத்திற்கு வந்திருந்தபோது அவர் தெரிவித்தார்.

சுங்கை காண்டீஸ் இடைத்தேர்தலுக்கு 14 நாள்கள் அளிக்கப்பட்டது. இப்போது இவ்விரு இடைத் தேர்தல்களுக்கும் 21 நாள்கள் கொடுக்கப்பட்டன. பரப்புரைக்கு எத்தனை நாள் கொடுப்பது பொருத்தமாக இருக்கும் என்பதை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version