புத்ராஜெயா, செப். 11
இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நேற்று வரை (செப்டம்பர் 10) வரையில் நாடு முழுவதும் 51,307 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் சிலாங்கூரில் மட்டும் 29,205 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது.
கோலாலம்பூரில் 4,704 பேரும் ஜோகூரில் 3,939 பேரும், பினாங்கில் 3,464 பேரும், சபாவில் 2,247 பேரும், பேராக்கில் 2,021 பேரும் டிங்கி காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு முதல் தேதி தொடங்கி, செப்டம்பர் முதல் தேதி வரையில் டிங்கி காய்ச்சலால் 29 மரணங்கள் நேர்ந்துள்ளன. டிங்கி காய்ச்சல் கிருமிகளை தடுக்கக்கூடியது எனக் கூறப்படும் டெங் வெக்சியா எனும் தடுப்பூசி மருந்து குறித்து சுகாதார அமைச்சு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

