Site icon அநேகன்

போர்டிக்சனில் எனது சேவை தொடரும் -டேனியல் பாலகோபால் அப்துல்லா 

கோலாலம்பூர், செப்.12-
போர்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலும் இத்தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து சேவையாற்றப் போவதாக டேனியல் பாலகோபால் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுடன் இணைந்து இத்தொகுதி மக்களுக்குச் சேவையாற்றவிருப்பதாக அவர் கூறினார்.

இத்தொகுதியில் அன்வார் வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. இந்த நடவடிக்கை அவர் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் நாட்டின் 8ஆவது பிரதமராவதற்கும் ஏதுவாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த டேனியல் தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற தலைவரிடம் ஒப்படைத்தார்.

இத்தொகுதியை மிகக் களிப்புடன் காலி செய்யவில்லை. அன்வார் தொடக்கத்தில் தயக்கம் காட்டினார். எனினும், நான் மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றப் போவது குறித்தும் அதற்கு அவரின் ஆதரவு தேவை என்றும் கூறிய பின்னர்தான் அன்வார் இதற்கு ஒப்புக் கொண்டதாக போர்ட்டிக்சன் நாடாளுமன்ற தொகுதியைல் காலி செய்வதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இதனிடையே, டேனியல் தனது தொகுதியை விட்டுக் கொடுத்ததற்காக அவருக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை என்று இக்கட்சியின் தலைமைச் செயலாளர் சைஃபுடின் நசுடியோன் தெரிவித்தார்.
ரஃபிசி பாண்டான் தொகுதியை டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸாவுக்காக விட்டுக் கொடுத்த போதும் கூட எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை. இப்போது அவர் ஏழையாக உள்ளார்” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

Exit mobile version