Site icon அநேகன்

ஏன் ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து குறைகிறது? டத்தோஸ்ரீ நஜீப் கேள்வி

கோலாலம்பூர், செப். 12
ரிங்கிட்டின் மதிப்பு ஏன் தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது என முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் அப்துல் ரசாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தாம் பதவியை இழந்தால் ரிங்கிட்டின் மதிப்பு உயரும் என்று 14ஆவது பொதுத் தேர்தலின் போது பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் கூறியதை நஜீப் சுட்டிக் காட்டினார்.

நான் பதவி இழந்து 4 மாதங்கள் கடந்துவிட்டது. அதே வேளையில், எண்ணெய் விலை வலுவடைந்து வரும் நிலையில் ரிங்கிட்டின் மதிப்பு குறைவது ஏன் என்று தெரியவில்லை என தமது முகநூல் அகப்பக்கத்தில் நஜீப் குறிப்பிட்டிருந்தார்.

ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து மோசமடைவதை தவிர்க்க புத்ரா ஜெயா தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

Exit mobile version