Site icon அநேகன்

2019இல் பள்ளிக்கூடங்களுக்கு 73 நாள் விடுமுறை

புத்ராஜெயா, செப்.13
அடுத்தாண்டு ஜனவரி 2ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும். ஜோகூர், கெடா, கிளாந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களில் ஒரு நாள் முன்னதாகவே ஜனவரி 1ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும்.

அடுத்தாண்டு பள்ளிக்கூடங்கள் 214 நாட்கள் செயல்படும் எனவும் 73 விடுமுறைகள் உள்ளன என்றும் கல்வி அமைச்சு தனது அகப்பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

விழாக்கால விடுமுறைக்காக நான்கு தினங்களுக்கு பள்ளிக்கூடம் மனு செய்ய முடியும். இந்த விழாக்கால விடுமுறையை இன்னொரு நாட்களில் மாற்றிக் கொள்ள அவசியமில்லை என அந்த அகப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மாற்று விடுமுறை தினத்திற்கு மனு செய்யலாம். அந்தந்த மாநில கல்வித் துறையின் அங்கீகாரம் இதற்கு தேவைப்படுகிறது. ஆண்டு பள்ளி விடுமுறை அடுத்தாண்டு நவம்பர் 23ஆம் தேதி தொடங்கும். அதே சமயம், ஜோகூர், கிளாந்தான், கெடா, திரெங்கானுவில் ஒரு நாளைக்கு முன்னதாக ஆண்டு விடுமுறை தொடங்கும்.

Exit mobile version